close
Choose your channels

எஸ்பிபி உடல்நிலை குறித்து சற்றுமுன் எஸ்பிபி சரண் வெளியிட்ட வீடியோ!

Monday, August 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று கமல், ரஜினி உள்பட ஒட்டுமொத்த திரையுலகினர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பதும் அறிந்ததே

இந்த நிலையில் தினந்தோறும் தனது தந்தையின் உடல்நிலை குறித்த அப்டேட்களை தெரிவித்துவரும் எஸ்பிபி சரண் அவர்கள் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றின் மூலம் இன்றைய எஸ்பிபி அவர்களின் உடல்நிலை குறித்த தகவலை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என்னுடைய தந்தை உடல்நிலை இன்றும் நேற்றை போலவே சீராக உள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலையில் கூடுதலாக எந்த விதமான பிரச்சனையும் இல்லை. அவர் உடல்நிலை நல்ல முறையில் தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நான் மீண்டும் உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் பிரார்த்தனையால் எனது தந்தை விரைவில் இந்த நோயிலிருந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. கடவுள் நிச்சயம் உதவி செய்வார் என்று கூறியுள்ளார்

எஸ்பிபி சரணின் இந்த வீடியோவில் இருந்து எஸ்பிபி அவர்களின் உடல்நிலை தேறி வருவதாகவும் நேற்றைப் போலவே இன்றும் அவரது ஐசிசியில்தான் இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment