மகளைக் கொன்று, வெட்டப்பட்ட தலையோடு சாலையில் நடந்த தந்தை… நடந்தது என்ன?

  • IndiaGlitz, [Thursday,March 04 2021]

உத்திரப் பிரதேச மாநிலத்தில் தந்தை ஒருவர் தன் மகள் காதலில் விழுந்ததால் அவரது தலையைத் துண்டித்து இருக்கிறார். மேலும் மகளின் தலையைப் பிடித்தப்படி சாலையில் நடந்து சென்று இருக்கிறார். இதைப் பார்த்த போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். இச்சம்பவம் உ.பி.யில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்ககிறது.

உ.பி மாநிலத்தின் ஹர்டோய் மாவட்டத்தில் வசித்து வருபவர் சர்வேஷ் குமார். இவருக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை விரும்பாத சர்வேஷ் குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்னுடைய மகளையே தலையைத் துண்டித்துக் கொன்று இருக்கிறார். மேலும் வெட்டப்பட்ட தலையைப் பிடித்துக் கொண்டு சாலையில் நடந்து சென்று இருக்கிறார். இதை அறிந்த போலீசார் அவரை உடனடியாகக் கைது செய்து உள்ளனர். இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உ.பியில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பெற்ற மகளையே தந்தை கொன்று இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உ.பியில் கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கொடுமை சம்பவம் தொடர்பாக 7,444 வழக்குகள் பதிவாகி உள்ளன. அதேபோல மகாராஷ்டிராவில் 6,402 வழக்குகளும் மத்தியப் பிரதேசத்தில் 6,503 வழக்குகளும் பதிவாகி உள்ளன.