தனுஷின் 'D43' படத்தின் மாஸ் அப்டேட்: டான்ஸ் மாஸ்டரின் டுவீட் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்து நடித்து முடித்துள்ள ’கர்ணன்’ மற்றும் ’ஜகமே தந்திரம்’ ஆகிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தனுஷின் 43வது படமான ‘D43’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 8ஆம் தேதி தொடங்கியது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
முதல்கட்ட படப்பிடிப்பில் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக இந்த படத்தின் டான்ஸ் மாஸ்டர் ஜானி தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜிவி பிரகாஷ் இசையில் தனுஷ் பாடிய இந்த பாடல் ஸ்டைலிஷாகவும் மாஸ் ஆகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சற்று முன்னர் டான்ஸ் மாஸ்டர் ஜானி தனது டுவிட்டர் பக்கத்தில் முதல் பாடலின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்றும் சூப்பர் டான்ஸ் மற்றும் சூப்பர் மாஸ் பாடலுக்காக காத்திருங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் செய்திகள் ஆகியுள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ’மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.@dhanushkraja Sir's #D43 1st song shoot wrapped up ??
— Jani Master (@AlwaysJani) January 12, 2021
Stay Tuned to witness the super massss moves for the mass track sung by #Dhanush sir, written by @Lyricist_Vivek garu with @gvprakash ?? @SathyaJyothi_ @karthicknaren_M @MalavikaM_ @smruthi_venkat @thondankani pic.twitter.com/gIaW5Sf2gM
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com