தனுஷின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Saturday,February 01 2020]

தனுஷ் நடித்த அசுரன் மட்டும் பட்டாஸ் ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான சுருளி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சுருளி படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் ’தனுஷின் 40வது படத்தின் கடைசி மூன்று நாள் படப்பிடிப்பு வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், இதனை அடுத்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி குறித்த தகவலை வரும் 9ஆம் தேதி வெளியிட இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இதனை அடுத்து 9ஆம் தேதியும் தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான விருந்து காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், சஞ்சனா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜேமஸ் காஸ்மோ, கலையரசன், உள்பட பலர் நடித்துள்ள ‘சுருளி’ திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்சன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

பாஜகவில் இணைந்த அஜித்-விஜய் பட இயக்குனர்

மத்தியில் ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சியில் கடந்த சில மாதங்களாக திரையுலகை சேர்ந்தவர்கள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகள் இணைந்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இன்னும் அணையாத காட்டுத்தீ.. ஆஸ்திரேலியாவில் அறிவிக்கப்பட்ட அவசர நிலை..!

ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெராவை நெருங்கும் காட்டுத்தீயால் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு  அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் வெற்று வார்த்தைகள்.. செயல்படுத்தும் விதமாக ஒரு திட்டம் கூட இல்லை..! பட்ஜெட்டை விமர்சித்த ராகுல் காந்தி.

நிதியமைச்சரின் இந்த உரை முற்றிலும் கார்ப்பரேட் நலன்களுக்காக இருப்பதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

காதல் திருமணம் செய்த கர்ப்பிணி மகள் மீது ஆசிட் வீசிய தந்தை: பெரும் பரபரப்பு

காதல் திருமணம் செய்து கர்ப்பிணியான சொந்த மகள் மீது அவரது தந்தையே ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நீ தான் தைரியமான ஆளாச்சே.. இப்போ ஹார்ன் அடி..! ஒலி மாசை குறைக்க மும்பை காவல்துறை செய்த முயற்சி.

இந்தியாவில் காற்று மாசுபாட்டுக்கு இணையாக ஒலி மாசுபாடும் இருப்பதாகக் கூறப்படுகிறது.