வடமாநில தொழிலாளர்களை கடுமையாக தாக்கிய தேமுதிக பிரமுகர்.....! கைது செய்த போலீசார்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் வீட்டு வாடகை தராத வடமாநில இளைஞர்களை தேமுதிக பிரமுகர், கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை, குன்றத்தூர், திருமுடிவாக்கத்தில் வீடுகளை வாடகைக்கு விட்டிருப்பவர் தான், தேமுதிக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜ்(40).
ஒடிசா மாநிலத்தை சார்ந்தவர் பிரதாப், இவரது சகோதரர் சஞ்சய்குமார்(32). இவர்கள் இருவரும் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனங்களுக்கு, வட மாநில தொழிலாளர்களை விநியோகம் செய்யும் வேலையை செய்து வருகிறார்கள். இவர்கள் திருமுடிவாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இதேபோல் வேலை தேடி வந்த 50-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களும், அங்கு வாடைகைக்கு தங்கியுள்ளனர்.
கொரோனா காரணத்தால், அந்த தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் கடந்த சில மாதங்களாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். அடிக்கடி சுரேஷ்ராஜ் வாடகை கேட்டுள்ளார். விரைவில் தந்துவிடுவோம் என கூறியவர்கள், ஊரடங்கு காரணமாக அண்மையில் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்துகொண்ட சுரேஷ் நேற்றைய முன்தினம் வடமாநில தொழிலாளர்களிடம் வாடகை கேட்டு அடித்துள்ளார். அவர்கள் துணிகளை கழட்டியும், முட்டுப்போட வைத்தும், சரமாரியாக தாக்கியுள்ளார் சுரேஷ். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக, குன்றத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி, சுரேஷை நேற்று கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments