பிரான்ஸ் நாட்டின் ரியாலிட்டி ஷோவில் கலக்கிய 'சொப்பனசுந்தரி': டி.இமான் மகிழ்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்த பாடல் ஒன்று பிரான்ஸ் நாட்டின் ரியாலிட்டி ஷோவில் கலக்கிய வீடியோ தற்போது வைரல் ஆகியதை அடுத்து, டி.இமான் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
விக்ரம் பிரபு நடித்த ‘வீரசிவாஜி’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ’சொப்பன சுந்தரி நான் தானே, நான் சொப்பன லோகத்தில் தேன் தானே’ என்ற பாடல் டி.இமான் இசையில் அருண்ராஜா காமராஜ் பாடல் வரிகளில் வைக்கம் விஜயலட்சுமி குரலில் உருவானது. இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த பாடல் சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் ரியாலிட்டி ஷோ ஒன்றில் ஒரு சிறுமி பாடியுள்ளார். இந்த சிறுமி பாடிய இந்த பாடலின் வீடியோ தற்போது யூடியூபில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த ரியாலிட்டி ஷோவின் நடுவர்கள் இந்த பாடலுக்கு எழுந்து நடனமாடி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்த இசையமைப்பாளர் டி இமான் ’சொப்பன சுந்தரி’ பாடல் பிரான்ஸ் நாட்டின் ரியாலிட்டி ஷோவில் பாடியது குறித்து கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ’வாழ்க தமிழ் வளர்க தமிழ்’ என்று குறிப்பிட்டுள்ளார். டி.இமானின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.
Glad to witness a kid singing #Soppanasundari in a French Reality Show! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!@iamVikramPrabhu @SonyMusicSouth @Arunrajakamaraj
— D.IMMAN (@immancomposer) September 6, 2020
Praise God!
The Voice kids: Kanesha - Soppana sundari https://t.co/bVyKQ2P3U9 via @YouTube
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments