'குறும்பா' பாடலுக்கு பின் இதுதான்: டி.இமான் வெளியிட்ட தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் மெலடி கிங் என்று பெயரெடுத்த இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் தற்போது ’தலைவர் 168’ உள்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ஆர்யா-சாயிஷா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகிவரும் ’டெடி’ என்ற படத்திற்கும் டி.இமான் தான் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்காக சமீபத்தில் ஒரு பாடலை கம்போஸ் செய்ததாகவும் இந்த பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுத, சித்ஸ்ரீராம் பாடியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள டி.இமான், இந்த மெலடி பாடல் ‘டிக் டிக் டிக்’ படத்தில் இடம்பெற்ற ‘குறும்பா’ பாடலுக்குப் பின் தனக்கு பிடித்த மிக அருமையான மெலடி பாடல் என்றும் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்
இந்த பாடலை பாடிய போது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், இந்த பாடலை ரசித்து பாடியதாகவும் சித்ஸ்ரீராமும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடல் மிக அருமையான ஒரு மெலடி பாடலாக ரசிகர்களுக்காக உருவாகியுள்ளது என்பது உறுதியாகிறது. மேலும் இந்த பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக ரிலீஸ் ஆக உள்ளதாக மாணவர்கள் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஆர்யா, சாயிஷா முதல்முறையாக ஜோடியாக நடித்திருக்கும் இந்த படம் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
It was really a nice experience lending my voice to @sonakshisinha for #Dabangg3 in all the 3 respective languages. #tamil #telugu #kannada #dubbing
— Nanditaswetha (@Nanditasweta) December 17, 2019
Thanks to @PDdancing @BeingSalmanKhan #ChulbulPandey pic.twitter.com/JZL0Agn3t8
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com