டி.இமான் வெளியிட்ட அட்டகாசமான 'தமிழன்' வீடியோ: இணையத்தில் வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய ஜெயம் ரவி நடித்த ’பூமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்னரே முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட்லுக், மூன்றாவது லுக் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை ஏற்கனவே வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என்று இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் அறிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த பாடலின் புரமோ வீடியோவை டி.இமான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
என்ற இந்த பாடலின் 18 வினாடி புரமோ வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜெயம் ரவி ஜோடியாக நிதிஅகர்வால் நடித்துள்ள இந்த படத்தில் ரோனிட் ராய், சதீஷ், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர். டட்லி ஒளிப்பதிவில் ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ’ரோமியோ ஜூலியட்’ மற்றும் ’போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Here's the Glimpse of #TamizhanEndruSollada from @actor_jayamravi's #Bhoomi, with a Strong Lyrics! #தமிழன்என்றுசொல்லடா From Sep 10th
— Diamond Babu (@idiamondbabu) September 4, 2020
An @immancomposer Musical @AgerwalNidhhi @dirlakshman @theHMMofficial @sujataa_hmm @actorsathish @dudlyraj @SonyMusicSouth @onlynikil pic.twitter.com/FppZMOfop1
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments