சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு
- IndiaGlitz, [Monday,May 06 2019]
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவர் தற்போது 'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், இயக்குனர்கள் பாண்டியராஜ், விக்னேஷ் சிவன், நெல்சன் ஆகியோர்களின் இயக்கத்தில் உருவாகும் படங்களிலும் சிவகார்த்திகேயன் வரிசையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் பாண்டிராஜ் இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். இந்த தகவலை இமான் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், 'ரஜினி முருகன்', 'சீமராஜா' போன்ற படங்களுக்கு டி.இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Immense Joy to be part of @pandiraj_dir sir’s and @sunpictures next venture starring thambi @Siva_Kartikeyan in the lead! #SK16BySunPictures#SK16MusicByImman
— D.IMMAN (@immancomposer) May 6, 2019
Praise God! pic.twitter.com/wgJJagbyQO