பிரபல பாடகியின் உறவினரை அறிமுகம் செய்த டி.இமான்: யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,September 12 2020]

இசையமைப்பாளர் டி இமான் அவ்வப்போது திறமையான பாடகர்களை இனம்கண்டு தான் இசையமைக்கும் படத்தில் அறிமுகம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. சமீபத்தில் அஜித்தின் ’விஸ்வாசம்’ படத்தின் பாடலை தத்ரூபமாக பாடிய திருமூர்த்தி என்ற மாற்று திறனாளியை பாடகராக அறிமுகம் செய்து வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்

இந்த நிலையில் ஜெயம் ரவியின் ’பூமி’ படத்தில் ஒரு பாடகியை அவர் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ’தமிழன் என்று சொல்லடா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே

டி.இமான் இசையில் மதன் கார்க்கி பாடல் வரிகளில் அனிருத் மற்றும் டி.இமான் பாடியிருந்த இந்த பாடலின் ஆரம்பத்தில் வரும் ஹம்மிங்கை பாடியது லாவண்யா சுந்தரராமன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பிரபல பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் நெருங்கிய உறவினர் என்பதை டி இமான் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்

‘தமிழன் என்று சொல்லடா’ என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான அவர் எதிர்காலத்தில் பெரிய பாடகியாக வருவதற்கு தனது வாழ்த்துக்கள் என்றும் டி.இமான் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்

More News

ஜோதி ஸ்ரீதுர்காவின் மரணமே இறுதி மரணமாக இருக்க செய்யப்போவது என்ன? கமலஹாசன்

நீட்தேர்வு அச்சம் காரணமாக ஏற்கனவே கோவையைச் சேர்ந்த சுபஸ்ரீ, அரியலூரை சேர்ந்த விக்னேஷ் ஆகிய இருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட

தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் தகவல்! ரசிகர்களிடையே பரபரப்பு

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ம் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென மார்ச் இறுதியில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை

நாளை நீட் தேர்வு எழுதாமல் விட்டால் மறுவாய்ப்பு இல்லை… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி!!!

இந்தியா முழுவதும் நாளை (செப்டம்பர் 13) நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்கான விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு இருந்தது.

தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம்!!!

கொரோனா நெருக்கடி நிலைமையில் இருந்து தமிழகம் தற்போது மீண்டு வருவதாகத் தமிழக அரசு சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.

பூமியை நோக்கி 38 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் நெருங்கும் ராட்சதகல்!!! பாதிப்பு இருக்குமா???

பூமியை நோக்கி 38,624 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு ராட்சத கல் வந்து கொண்டிருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.