ஈழத்தமிழ் பாடகிக்கு வாய்ப்பு கொடுத்த டி.இமான்: குவியும் பாராட்டு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இசையமைப்பாளர் டி இமான் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் முக்கிய நபராக இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே. கடந்த சில வருடங்களுகு முன்னர் அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’கண்ணான கண்ணே’ என்ற பாடலை பாடிய திருமூர்த்தி என்ற மாற்றுத்திறனாளிக்கு தன்னுடைய ’சீறு’ படத்தில் பாடுவதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி பல இசைத் திறமை உள்ளவர்களுக்கு அவர் தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ஈழத்தைச் சேர்ந்த பாடகி ஒருவருக்கு தான் இசையமைக்கும் படத்தில் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார். ஈழத்திலிருந்து சுவிட்சர்லாந்து சென்று தமிழீழ பாடகி ’CLEO VII’ என்பவருக்கு, தான் இசையமைத்து வரும் ’லாபம்’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாட வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடித்துள்ள ’லாபம்’ திரைப்படத்தை இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கி உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு இசையமைத்து வரும் டி இமான், முக்கிய பாடல் ஒன்றுக்கு ஈழத்தமிழ் பெண்ணுக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளதை அடுத்து அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Glad to Introduce a Tamil Eelam Rapper from Switzerland “CLEO VII” for an energetic track in VijaySethupathi,ShrutiHaasan starrer #Laabam Directed by SP Jananathan and Produced by @7CsPvtPte #DImmanMusical
— D.IMMAN (@immancomposer) October 8, 2020
Praise God! pic.twitter.com/ClQ6vVIkw9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com