ஈழத்தமிழ் பாடகிக்கு வாய்ப்பு கொடுத்த டி.இமான்: குவியும் பாராட்டு!

  • IndiaGlitz, [Thursday,October 08 2020]

பிரபல இசையமைப்பாளர் டி இமான் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் முக்கிய நபராக இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே. கடந்த சில வருடங்களுகு முன்னர் அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’கண்ணான கண்ணே’ என்ற பாடலை பாடிய திருமூர்த்தி என்ற மாற்றுத்திறனாளிக்கு தன்னுடைய ’சீறு’ படத்தில் பாடுவதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி பல இசைத் திறமை உள்ளவர்களுக்கு அவர் தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஈழத்தைச் சேர்ந்த பாடகி ஒருவருக்கு தான் இசையமைக்கும் படத்தில் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார். ஈழத்திலிருந்து சுவிட்சர்லாந்து சென்று தமிழீழ பாடகி ’CLEO VII’ என்பவருக்கு, தான் இசையமைத்து வரும் ’லாபம்’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாட வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடித்துள்ள ’லாபம்’ திரைப்படத்தை இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கி உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு இசையமைத்து வரும் டி இமான், முக்கிய பாடல் ஒன்றுக்கு ஈழத்தமிழ் பெண்ணுக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளதை அடுத்து அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

தெலுங்கிற்கு செல்லும் விஜய்சேதுபதியின் முதல் படம்: பரபரப்பு தகவல் 

தமிழ் நடிகராக மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் நடித்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்பது தெரிந்ததே. அந்த வகையில் மலையாள திரையுலகில்

ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர்!

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் தற்போது சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் 'ஐங்கரன்', 'ஆயிரம் ஜென்மங்கள்', 'அடங்காதே'

தொடர்ந்து 13 ஆண்டாக இந்தியாவின் முதல் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்தவர்!!! வியக்க வைக்கும் சொத்து மதிப்பு!!!

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டு உள்ளது. அந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 13 ஆண்டுகளாக இந்தியாவின் முதல் பணக்காரராக தேர்வு செய்யப்பட்டு வருகிறார்

ஒரு நாள் முதல்வர் பாணியில்… ஒரு நாள் அதிபர்…. உண்மைச் சம்பவம்!!!

பின்லாந்து அதிபராக 16 வயது சிறுமி ஆவா முர்டே இன்று பதவியில் அமர்ந்து இருக்கிறார். இச்சம்பவம் உலகையே திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது.

பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியதால்… 3 காவலர்கள் பணியிடை மாற்றமா???

சமீபத்தில் கடலூரில் இருந்து 3 காவலர்கள் கள்ளக்குறிச்சிக்கு பணியிடை மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.