திமுக எம்பி வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த டி இமானின் முன்னாள் மனைவி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அபார வெற்றி பெற்ற நிலையில் அவரது வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை பிரபல இசையமைப்பாளர் டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டிஜிட்டல் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட், லோக்சபா தேர்தலின் போது தென்சென்னையில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியனுக்கு டிஜிட்டல் முறையில் பிரச்சாரம் செய்தார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் வெற்றிக்காக பணி செய்ததில் தான் பெருமை அடைவதாகவும், தேர்தல் வெற்றிக்கு பிறகு அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததில் தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் தென் சென்னை மக்களுக்கு அவர் ஒரு ஒளிவிளக்காக இருப்பார் என்றும் மோனிகா ரிச்சர்ட் கூறியுள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
I am filled with immense pride and gratitude for the chance to collaborate with @ThamizhachiTh Mam during the Loksabha election campaign. Meeting her after the victory was truly overwhelming. Her radiant smile will always be a beacon of light for the people of South Chennai. pic.twitter.com/48nHVJwBvx
— Monicka Richard (@MonickaRichard) June 18, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments