திருமணத்திற்கு மறுநாள் டி.இமானின் முன்னாள் மனைவி கூறிய குற்றச்சாட்டு!

  • IndiaGlitz, [Wednesday,May 18 2022]

பிரபல இசையமைப்பாளர் டி இமானின் இரண்டாவது திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் திருமணம் முடிந்த மறுநாளே அவரது முன்னாள் மனைவி அவர் மீது குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல இசையமைப்பாளர் டி இமான் தனது மனைவி மோனிகா என்பவரை சமீபத்தில் விவாகரத்து செய்தார். மனைவியை விட்டு பிரிந்தாலும் குழந்தைகளை சந்திக்க இமானுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது என்பதும் குழந்தைகளின் பாஸ்போர்ட்டுகள் இமானிடம் இருந்ததாக கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது முன்னாள் மனைவி மோனிகா, குழந்தைகளின் பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக பொய்யான தகவலை கூறி புதிய பாஸ்போர்ட் எடுக்க விண்ணப்பம் செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டி இமான் வழக்கு தொடர்ந்தார்..

இந்த வழக்கு தற்போது நடைபெற்று வரும் நிலையில் டி இமானின் திருமணம் முடிந்த மறுநாள் இதுகுறித்து அவருடைய முன்னாள் மனைவி மோனிகா கூறியபோது ’டி இமானிடம் குழந்தைகளின் பாஸ்போர்ட்டை தரும்படி கேட்டதாகவும் ஆனால் வீடு மாறும் போது அவை தொலைந்து விட்டதாக அவர் கூறியதால் தான் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் கூறியுள்ளார். மோனிகா கூறிய இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.