டி.இமானின் வாழ்த்துக்களை பெற்ற 13 வயது பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரளாவை சேர்ந்த 13 வயது சிறுவன் ஆதித்யா சுரேஷ் என்பவர் இந்த சின்ன வயதிலேயே பாடுவதில் திறமையுள்ளவர் என்பதும், அவர் பாடிய பல பாடல்கள் ஹிட்டாகியுள்ளது என்பதும், பல இசை மேடைகளில் அவர் பங்குபெற்று ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிறக்கும்போதே மாற்றுத்திறனாளியாக பிறந்த ஆதித்யா சுரேஷ் குறித்து அவரது பெற்றோர்கள் கவலைப்பட்ட நிலையில் தற்போது அவரது இசைத்திறமையை உலகமே பாராட்டுவதால் ஆதித்யா சுரேஷால் அவர்கள் பெருமையடைந்து வருகின்றனர். இதுவரை கேரளாவில் மட்டும் 400 மேடைகளில் பாடியுள்ளதாகவும், இந்தியாவின் ஒருசில நகரங்களுக்கும் சென்று பாடியுள்ளதாகவும் தெரிவித்த ஆதித்யா சுரேஷ், சவுதி அரேபியாவில் பாட வாய்ப்பு கிடைத்ததாகவும், ஆனால் கொரோனா காரணத்தால் அந்த நிகழ்ச்சியில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காந்த கண்ணழகா’ என்ற பாடலை அனிருத் மற்றும் நீதிமோகன் பாடியிருந்தனர். இரண்டு பேர் பாடிய இந்த பாடலை ஆதித்யா சுரேஷ் தனியாளாக பாடி அசத்தியுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகிய நிலையில் இந்த வீடியோவை பார்த்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ இசையமைப்பாளர் டி இமான், ஆதித்யா சுரேஷுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
God be with you Adithya Suresh! https://t.co/Z1Cz9HTOt3
— D.IMMAN (@immancomposer) July 27, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments