மறுமணத்திற்கு மூன்று கண்டிஷன் போட்டாரா டி.இமான்?
- IndiaGlitz, [Sunday,March 13 2022]
தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளரான டி இமான் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்த நிலையில் அவர் விரைவில் மறுமணம் செய்யப் போவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னை திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கு டி இமான் மூன்று நிபந்தனைகளை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.
பிரபல இசையமைப்பாளர் டி இமான், மோனிகா ரிச்சர்ட் என்பவரை கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் சமீபத்தில் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்தார். இதனை அடுத்து சென்னையை சேர்ந்த பெண் ஒருவரை டி இமான் திருமணம் செய்ய போவதாகவும் இரு தரப்பு பெரியவர்கள் பேசி முடித்த அரேஞ்ச் மேரேஜ் இது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த டி இமான், தனது மறுமணம் குறித்து தான் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் தனக்கு வரும் மனைவி கண்டிப்பாக விதவை அல்லது விவாகரத்து பெற்றவராக இருக்க வேண்டும் என்றும், ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருக்க வேண்டும் என்றும், தன்னுடைய குழந்தைகளிடம் அன்புடன் இருப்பவராக இருக்க வேண்டும் என்றும் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.