தடுப்பூசியை விரும்பாமல் பாடகி செய்த காரியம்… சோகத்தில் முடிந்த சம்பவம்!

  • IndiaGlitz, [Thursday,January 20 2022]

செக் குடியரசு நாட்டில் பிரபல நாட்டுப்புற பாடகி ஒருவர் கொரோனா தடுப்பூசியை விரும்பாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதனால் இயற்கையாக உடலில் ஏற்படும் ஆன்டிபாடிகளை விரும்பியிருக்கிறார். இதற்காக பாதுகாப்பு வழிமுறைகளை மீறி கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட அவர் தற்போது உயிரிழந்த சம்பவம் பலரது மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒன்றே தீர்வாக நம்பப்படுகிறது. இந்நிலையில் பல ஐரோப்பிய நாடுகள் கொரோனா வைரஸ்க்கு எதிராக உடலில் இயற்கையாக தோன்றும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆன்டிபாடிகளை நம்பவும் செய்கின்றனர். சுவீடன் நாட்டில் இதே வழிமுறையைப் பின்பற்றி பொதுமக்கள் கடந்த 2 ஆண்டுகளாக வாழ்க்கை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

காரணம் கொரோனா நோய்த்தொற்றை பார்த்து பீதி அடைவதைவிட நாமே தானாக முன்வந்து அந்த நோயால் பாதிக்கப்படும்போது கொரோனா வைரஸ்க்கு எதிரான இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலில் உண்டாகும். இந்த ஆன்டிபாடிகளே எதிர்காலத்தில் கொரோனா வைரஸில் இருந்து நம்மைக் காப்பாற்றும் எனும் அறிவியல் வழிமுறையை பலரும் நம்பினர்.

தற்போது இதேபோன்ற கொள்கையால் ஈர்க்கப்பட்ட செக் நாட்டு பாடகி ஹனா ஹோர்கா என்பவர் தடுப்பூசியை தவிர்த்து இருக்கிறார். மேலும் தாமாக முன்வந்து பாதுகாப்பு வழிமுறைகளை மீறி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு பாடகியின் கணவர் மற்றும் மகன் இருவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டபோது அதை மறுத்து கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் நோயில் இருந்து சற்று குணமடைந்த அவர் தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து பல ஐரோப்பிய நாடுகளில் பாடகி ஹனா ஹோர்காவின் கொள்கையைப் பற்றி விவாதம் கிளம்பி இருக்கிறது. மேலும் இந்தச் சம்பவத்தை குறிப்பிட்டு காட்டும் சில சுகாதாரத்துறை அதிகாரிகள் மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.