என்னால் தான் ரஜினி, இளையராஜா இடையே சண்டை வந்தது: அமெரிக்க நடிகையின் பதிவு..!
- IndiaGlitz, [Tuesday,December 03 2024]
என்னால் தான் இசைஞானி இளையராஜாவுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும் இடையே ஒரு அழகான செல்ல சண்டை நடந்தது என அமெரிக்க பாடகி, தயாரிப்பாளர் மற்றும் நடிகை சிந்தியா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அமெரிக்க நடிகை சிந்தியா லூர்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இசைஞானி இளையராஜா உடன் உள்ள புகைப்படங்கள், வீடியோ மற்றும் இசைஞானி இளையராஜா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவில் இன்று இளையராஜா அவர்களின் அலுவலகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்தேன். என்னுடன் ஒரே புகைப்படத்தில் இரண்டு ஜாம்பவான்கள் இருப்பதைவிட வேறு என்ன கிடைக்கப் போகிறது! குறிப்பாக அவர்கள் இடையே நடந்த அழகான சண்டையை பார்த்து ரசித்தேன்.
ரஜினி அவர்களுக்கு மரியாதை அளிக்கும் விதத்தில் அவரை நடுவில் நிற்க வைக்க வேண்டும் என இளையராஜா கேட்டுக்கொண்டார். ஆனால், இளையராஜா அவர்களுக்கு மரியாதை தரும் வகையில் அவரை நடுவில் நிற்க வைக்க வேண்டும் என ரஜினி கேட்டுக்கொண்டார்.
இந்த செல்ல சண்டையை நான் பார்த்து ரசித்தேன். கடைசியில் மூவரும் எங்கு நிற்க வேண்டுமோ அங்கு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். சூப்பர் ஸ்டார் அவர்களிடமிருந்து எனக்கு ஆசீர்வாதமும் கிடைத்தது, என்று தெரிவித்துள்ளார்.
View this post on Instagram