ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிலிண்டர் வெடிப்பு… கோவையில் நடந்த கொடூரம்!
- IndiaGlitz, [Saturday,May 22 2021]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத வகையில் தொடர்ந்து தமிழக மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளின் முன்பு ஆம்புலன்ஸ் வாகனத்தில் நோயாளிகள் பல மணிநேரமாகக் காத்து கிடக்கின்றனர்.
இப்படி கோவை அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டு இருந்த ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து அதனால் பலத்த தீ ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து அருகில் இருந்த தீயணைப்பு வீரர்கள் அந்தத் தீயை துரிதமாக அணைத்ததாகவும் இதனால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல் கூறப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தொடர்ந்து பல்வேறு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மாவட்டம் தோறும் இந்த சிறப்பு சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டு வந்தாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொடர்ந்து காத்துக் கிடக்கின்றன. அதிலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பல மணிநேரமாக தொடர்ந்து வெயிலில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இப்படி கோவை அரசு மருத்துவமனை முன்பு அதிக சூடு காரணமாக ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து அதனால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவத்தை அடுத்து அதிகாரிகளும் நோயாளிகளும் பதற்றம் அடைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
?? ??
— கார்த்திக் சதிஸ்குமார் (@karthisathees) May 22, 2021
சரியான நேரத்தில் தீயணைப்பு துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் செயல்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது...#Coimbatore #gh pic.twitter.com/EVvtY3PXEz