குமரி அருகே ஓகி புயல்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
- IndiaGlitz, [Thursday,November 30 2017]
கன்னியாகுமரி அருகே ஓகி புயல் உருவாகியுள்ளதாகவும், இந்த புயல் குமரி கடலோர பகுதி வழியாக மேற்கு நோக்கி நகரும் என்பதால் கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் கடலோர பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இந்திய வானிலை மையமும் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு வெதர்மேன் கூறியது போலவே தற்போது குமரி பகுதியில் ஓகி புயல் காரணமாக மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. திருச்செந்தூர் பகுதியில் 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.
இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில் இந்த புயல்காற்று வர்தா புயல் போல் ஊருக்குள் வர வாய்ப்பில்லை என்பதுதான். இருப்பினும் பெரிய மரங்களின் கீழ் மனிதர்கள் ஒதுங்க வேண்டாம் என்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை மரத்தின் அடியில் பார்க்கிங் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது
மேலும் குமரி கடலுக்குள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறுவுறுத்தப்பட்டுள்ளது.