புயல் எச்சரிக்கை கூண்டு எதற்கு ஏற்றப்படுகிறது? அந்த எண்களுக்கு அர்த்தம் என்ன???
Send us your feedback to audioarticles@vaarta.com
பெரும்பாலும் புயல் காலங்களில் இந்த எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது என ஊடகங்களில் செய்தி வெளியாகும். ஆனால் புயல் எச்சரிக்கை கூண்டு எதற்காக ஏற்றப்படுகிறது? அந்த எண்கள் என்ன பொருளை உணர்த்துகின்றன? அதிலும் இருப்பதிலேயே எந்த எண் எச்சரிக்கை கூண்டு அதிக ஆபத்துக் கொண்டது போன்ற விவரங்கள் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து இருப்பது இல்லை.
1-11 வரையிலான புயல் எச்சரிக்கை கூண்டு எண்களை பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் பயன்படுத்து கின்றனர். இந்த எச்சரிக்கை கூண்டுகள் பெரும்பாலும் பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகளாக ஏற்றப்படும். இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கை கூண்டுகளாக ஏற்றப்படும். கடற்கரை ஓரங்களில் இருக்கும் மீனவர்கள் மற்றும் அங்கு வாழும் மக்களுக்கு இந்த புயல் எண் எச்சரிக்கை கூண்டு பற்றிய விவரங்கள் முழுமையாகத் தெரிந்து இருக்கும். ஒருவேளை அவர்கள் ஊடகச் செய்திகளை பார்க்காமலே கடற்கரை ஓரங்களில் நடமாடினால் அவர்களை எச்சரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் இந்த எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுகிறது.
1-புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்த இந்த எச்சரிக்கை கூண்டு எண் ஏற்றப்படும். மேலும் துறைமுகங்கள் பாதிக்கப்படாத அளவிற்கு பலமாக காற்று வீசும் என்பதையும் இது உணர்த்தும்
2-புயல் உருவாகி உள்ளது என்று எச்சரிப்பதற்காக இந்த எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கையை கண்டால் துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று அர்த்தம்.
3-திடீர் காற்றோடு மழை பெய்யும் வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டு உள்ளது என்று பொருள்.
4-துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து என்பதைக் குறிக்க இந்த எச்சரிக்கை கூண்டு எண் ஏற்றப்படுகிறது.
5-புயல் உருவாகி இருப்பதை குறிக்கவும் இடது பக்கமாக புயல் கரையைக் கடக்கும் என்பதை உணர்த்தவும் இந்த எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது.
6-புயல் வலதுபக்கமாக கரையைக் கடக்கும்போது துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படுத்தப்படும் என்பதைக குறிக்க இது ஏற்றப்படுகிறது.
7-துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கையாக இது ஏற்றப்படுகிறது.
8-மிகுந்த அபாயம் என்பதை உணர்த்த இந்த எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது. புயல் தீவிர புயலாகவோ அதிதீவிர புயலாகவோ உருவெடுத்து துறைமுகத்தின் இடதுபக்கமாக கரையைக் கடக்கும் என்று அர்த்தம்
9-புயல் தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ உருவெடுத்து உள்ளது என்று அர்த்தம்
10-அதி தீவிர புயல் உருவாகி உள்ளது என்றும் அது துறைமுகம் அருகே கடந்து செல்லும் பெரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது என்பதை உணர்த்த இந்த எண் ஏற்றப்படும் .
11-இதுதான் உச்சபட்சமான புயல் எச்சரிக்கை கூண்டு எண். வானிலை மையத்துடனான தொடர்பு முற்றிலும் அறுந்து பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது என்பதைக் குறிக்க இந்த எண் ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கை கூண்டு எண்களை வைத்து பொதுமக்களை எச்சரிச்சையாக இருக்கும்படி பேரிடர் மீட்புக்குழு மக்கள் மத்தியில் தொடர்ந்து பிரச்சாரம் செய்யவும் முற்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout