நிவர் புயல் கரையைக் கடந்தப் பின்பும் வட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
நிவர் புயல் கரையைக் கடந்த பின்பும் சில வட மாவட்டப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில் கரையைக் கடக்க தொடங்கியது. இந்த நிகழ்வு இன்று அதிகாலை 2.30 மணிவரை நீடித்ததாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு உள்ளது. இதனால் புயல் தற்போது முற்றிலும் வலுவிழந்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஆனால் புயல் வலுவிழந்து வரும் நிலையிலும் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்றும் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. மேலும் தீவிரப்புயல் கரையைக் கடந்த பிறகு அடுத்த 6 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழந்து சாதாரணப் புயலாகவும் அதற்கு அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக உள் மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும் ஒருசில இடங்களில் கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும். அப்போது சூறாவளி காற்று மணிக்கு 65-75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு இருக்கிறது.
மேலும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை போன்ற பகுதிகளிலும் மணிக்கு 55 முதல் 65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் இந்தப் பகுதிகளில் வீடுகள் மற்றும் குடிசைகளின் மேற்கூரை பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பகுதிகளில் மின் இணைப்புகள் மற்றும் தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்படலாம் எனவும் தெரிவிக்ககப் பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments