நயன்தாரா படத்தில் ஹாங்காங் சைக்கிள் ஸ்டண்ட் கலைஞர்
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று 'இமைக்கா நொடிகள்'. சிபிஐ அதிகாரியாக நயன்தாரா நடித்து வரும் இந்த படத்தில் அதர்வா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் சைக்கிள் ஸ்டண்ட் காட்சிக்காக இயக்குனர் அஜய்ஞானமுத்து ஹாங்காங்கில் இருந்து உண்மையான சைக்கிள் ஸ்டண்ட் கலைஞரான லீ ஹான் யூ என்பவரை வரவழைத்துள்ளார். அதர்வா மற்றும் உள்ளூர் ஸ்டண்ட் நடிகக்ரளுக்கு லீ ஹான் யூ பயிற்சி அளித்து வருகிறார். இந்த ஸ்டண்ட் காட்சிகள் பெங்களூரில் படமாக்கப்பட்டு வருகிறது.
நயன்தாரா, அதர்வா, ராஷிகண்ணா, அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout