நீங்க பேசாததை பேசியதுபோல காட்ட முடியும்…. அச்சுறுத்தும் டீப் ஃபேக் செயலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் ஏரி இருப்பதற்கான ஆதாரத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். ஆனால் இதே தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்து சில சைபர் திருடர்கள் செய்யாததை செய்ததுபோல நிஜ வீடியோக்களை உருவாக்கியும் ஆடியோக்களையும் உருவாக்கியும் தற்போது மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
மெஷின் லேனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டீப் ஃபேக் டெக்னாலஜியுடன் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய செயலிதான் டீப் ஃபேக். இதில் ஒருவரின் உருவத்தை தத்ரூபமாகச் செயற்கையில் உருவாக்க முடியும். அந்த உருவத்தை உங்களுக்கு தேவையான மாதிரி எதை வேண்டுமானாலும் செய்ய வைக்க முடியும்.
அதேபோல அந்த உருவம் என்னவெல்லாம் பேச வேண்டும என்று நினைக்கிறீர்களோ அதை எளிதாகப் பேச வைத்துவிடலாம். ஆனால் இந்த போலி வீடியோக்களையோ அல்லது ஆடியோக்களையோ பார்க்கும் ஒரு நபரால் உண்மை எது? பொய் எது? என்று அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது.
காரணம் சினிமாவில் இரட்டையர் வேடத்திற்கு பயன்படுத்தப்படும் அதிதொழில்நுட்ப நுணுக்கங்கள் இந்த டீப் ஃபேஸ் ஆப்பில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதை ஆப்பை வைத்து விஷமிகள் இனி பிரபலங்களைப் போல பேசி பணம் பறிப்பது? ஏன் பெண்களை ஆபாசமாகக் காட்டி அவர்களையே மிரட்டுவது? பேசாத வார்த்தைகளுக்கு நம்மையே பொறுப்பாளிகளாக்கி நம்மை சிக்கலில் மாட்ட வைப்பது போன்று எண்ணற்ற திருட்டுத்தனங்கள் செய்ய முடியும்.
அதனால் இதுபோன்ற வீடியோக்களை வைத்து யாரேனும் மிரட்டினாலோ அல்லது உங்களைப் பற்றி தவறாகச் சொன்னாலோ உடனே பாதுகாப்பாக சைபர் க்ரைம் போலீசாரை அணுகிவிடுங்கள். அதை விட்டுவிட்டு எதிராளியின் வார்த்தைகளுக்கு பயந்து நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments