புதிய வைரஸ்: பயனாளிகள் ஜாக்கிரதை
- IndiaGlitz, [Wednesday,May 20 2020]
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் தற்போது புதிய வைரஸ் ஒன்று தோன்றி வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பயனாளிகளை மோசடி செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
செர்பரஸ் ட்ரோஜன் என்ற பெயரில் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடும் புதிய வைரஸ் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சிபிஐ தெரிவித்துள்ளது. சர்வதேச போலீஸாரின் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிபிஐ அனைத்து மாநில அரசுகளுக்கும், வங்கிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது அதில் கொரோனா குறித்த விவரங்கள் அடங்கிய குறுந்தகவல் மற்றும் இமெயில் அனுப்பபடுவதாகவும் அந்த இமெயில் அல்லது குறுந்தகவலில் உள்ள லிங்க்கை க்ளிக் செய்தால் செர்ப்ரஸ் வைரஸ் கணினி மற்றும் மொபைல் போனுக்குள் புகுந்துவிடும் என்றும் அந்த வைரஸ் மின்னஞ்சல், வங்கி கணக்கு விபரம், கிரிடிட் கார்டு டெபிட் கார்டு உள்பட அனைத்து ரகசியங்களும் திருடி விடும் என்றும் இதனால் பயனாளிகளின் பணம் ஒட்டுமொத்தமாக பணமும் பறிபோக வாய்ப்பு இருப்பதாகவும் சிபிஐ எச்சரித்துள்ளது.
இதனை அடுத்து கொரோனா வைரஸ் குறித்து வரும் நம்பகத்தன்மை இல்லாத செயலிகளை பொதுமக்கள் டவுன்லோடு செய்யக்கூடாது என்றும் அதுகுறித்து வரும் குறுந்தகவல் ம்ற்றும் லிங்குகளை பொதுமக்கள் கிளிக் செய்யக்கூடாது என்றும் சிபிஐ கூறியுள்ளது. இதுகுறித்து வங்கி நிர்வாகிகளும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது