விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடித்த சைபர் க்ரைம்!

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படமான ’800’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டதில் இருந்து அவருக்கு கண்டனங்கள் குவிந்தன. குறிப்பாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான பின்னர் பாரதிராஜா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும், ஒருசில அரசியல்வாதிகளும் அவருக்கு கண்டனம் தெரிவித்ததோடு அந்த படத்தில் இருந்து விலகுமாறு கோரிக்கை விடுத்தனர்

இந்த நிலையில் சமீபத்தில் ’நன்றி வணக்கம்’ என பதிவு செய்து ’800’ படத்தில் இருந்து விலகியதாக விஜய் சேதுபதி அறிவித்தார். இந்த நிலையில் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வந்தனர்

இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் பதிவு செய்துள்ள டுவிட்டில் இருந்து ஐபி முகவரி கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையில் அவர் இலங்கையில் இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து இன்டர்போல் போலீசார் உதவியுடன் அந்த நபரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த நபர் இன்னும் ஒரு சில நாட்களில் இன்டர்போல் உதவியுடன் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது