CWC என்னுடைய பிறந்த வீடு, அந்த நாட்கள் ஆனந்தமானவை..... வெங்கடேஷ் பட்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல சமையற் கலைஞரும், குக் வித் கோமாளியின் 1,2,3 & 4 சீஸனின் ஜட்ஜாக இருந்த வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி புகழ் குரோஷியுடன் அளித்த ஜாலியான பேட்டி.
" புகழ் ஒரு உழைப்பாளி,சுருட்ட முடி, அதையும் நடு வாகு எடுத்து சீவியிருப்பான். முதலில் பார்த்தபோது புகழ் குண்டாயிருப்பான். கொடுத்த வலையை சரியாக செய்பவன். இப்போது அவன் உள்ள நிலை, எனக்கு மிகவும் சந்தோசம் கொடுக்கக்கூடியது.
செஃப் தாமு, நான் மிகவும் மதிக்கக்கூடியவர். எங்கள் இருவரின் பாணியும் வேறு. எங்களுக்குள்ள ஒரு நல்ல bondage இருந்தது. செட்ல நான் எதாவது தவறாக மதீப்பீடு செய்திருந்தாலும், அவர் ஒருபோதும் அங்கு சொன்னதில்லை. என்னை தனியாக அழைத்துதான் சொல்லுவார். என்னுடைய குரு ஸ்தானத்தில் உள்ளவர்.
பாலா தமிழகத்தின் கொடை வள்ளல். எனக்கு முடியாதபோது கூட அவனுடைய காமெடி பார்த்தால் சிரிப்பு வரும். உனக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்.
குரோஷி ஒரு சிறந்த perfomer. உனக்கு சரி என்று பட்டதை செய். நீ மக்களை சிரிக்க வைப்பவன், அதனால நீ தப்பு செய்ய மாட்ட. CWC சீசன் 5 ல நீ ஒரு தனி performar . உனக்குனு நீ ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைச்சிருக்க. இந்தியன் தாத்தா கெட் அப் போட்டதெல்லா வேற லெவல்.
CWC எனக்கு பிறந்த வீடு மாறி. கடந்த 1,2,3 & 4 சீசன்ஸ் என்னால மறக்கவே முடியாது. எனக்கும் விஜய் டிவிக்கும் எந்த பிரச்னையும் இல்லை. அந்த நாட்கள் ரொம்பவும் மகிழ்ச்சியானது.
என இந்த பேட்டியின் இந்த பகுதியில் பேசியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Mithra Anjali
Contact at support@indiaglitz.com
Comments