CWC என்னுடைய பிறந்த வீடு, அந்த நாட்கள் ஆனந்தமானவை..... வெங்கடேஷ் பட்

  • IndiaGlitz, [Wednesday,October 02 2024]

பிரபல சமையற் கலைஞரும், குக் வித் கோமாளியின் 1,2,3 & 4 சீஸனின் ஜட்ஜாக இருந்த வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி புகழ் குரோஷியுடன் அளித்த ஜாலியான பேட்டி.

புகழ் ஒரு உழைப்பாளி,சுருட்ட முடி, அதையும் நடு வாகு எடுத்து சீவியிருப்பான். முதலில் பார்த்தபோது புகழ் குண்டாயிருப்பான். கொடுத்த வலையை சரியாக செய்பவன். இப்போது அவன் உள்ள நிலை, எனக்கு மிகவும் சந்தோசம் கொடுக்கக்கூடியது.

செஃப் தாமு, நான் மிகவும் மதிக்கக்கூடியவர். எங்கள் இருவரின் பாணியும் வேறு. எங்களுக்குள்ள ஒரு நல்ல bondage இருந்தது. செட்ல நான் எதாவது தவறாக மதீப்பீடு செய்திருந்தாலும், அவர் ஒருபோதும் அங்கு சொன்னதில்லை. என்னை தனியாக அழைத்துதான் சொல்லுவார். என்னுடைய குரு ஸ்தானத்தில் உள்ளவர்.

பாலா தமிழகத்தின் கொடை வள்ளல். எனக்கு முடியாதபோது கூட அவனுடைய காமெடி பார்த்தால் சிரிப்பு வரும். உனக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்.

குரோஷி ஒரு சிறந்த perfomer. உனக்கு சரி என்று பட்டதை செய். நீ மக்களை சிரிக்க வைப்பவன், அதனால நீ தப்பு செய்ய மாட்ட. CWC சீசன் 5 ல நீ ஒரு தனி performar . உனக்குனு நீ ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைச்சிருக்க. இந்தியன் தாத்தா கெட் அப் போட்டதெல்லா வேற லெவல்.

CWC எனக்கு பிறந்த வீடு மாறி. கடந்த 1,2,3 & 4 சீசன்ஸ் என்னால மறக்கவே முடியாது. எனக்கும் விஜய் டிவிக்கும் எந்த பிரச்னையும் இல்லை. அந்த நாட்கள் ரொம்பவும் மகிழ்ச்சியானது.

என இந்த பேட்டியின் இந்த பகுதியில் பேசியுள்ளார்.

More News

விஜய்யின் 'தளபதி 69' படத்தின் நாயகி இவர்தான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் 69 வது திரைப்படமான 'தளபதி 69' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும், இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களின் அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம்

காந்தி பிறந்த நாளில் 'காந்தி டாக்ஸ்' வீடியோ..விஜய் சேதுபதி ரசிகர்கள் குஷி..!

அக்டோபர் இரண்டாம் தேதி காந்தியின் பிறந்த நாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் "காந்தி டாக்ஸ்" என்ற படத்தின்

துணை முதல்வர் உதயநிதிக்கு  திரையுலகம் சார்பில் பாராட்டு விழா: ஆர்கே செல்வமணி

நடிகராக இருந்து துணை முதல்வர் ஆகியுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு கிடைத்தால் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என பெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.

ரஜினியின் உடல்நிலை.. மருத்துவர்கள் கூறிய லேட்டஸ்ட் தகவல்.. 'கூலி' படப்பிடிப்பு தாமதமாகுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை

கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்ட  DMY கிரியேஷன் நிறுவனர் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி..!

திரையுலக முன்னணி பிரபலங்கள் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும்,  DMY கிரியேஷன் நிறுவனர் மகனின் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி !!