கேன்சரால் அவதிப்பட்ட பிரபல இயக்குநர் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான “செங்கோட்டை“ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் இயக்குநர் சி.வி.சசிகுமார்(54). இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மாரடைப்பால் காலமானார். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் அர்ஜுன், மீனா, ரம்பா ஆகியோர் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான “செங்கோட்டை“ திரைப்படத்தை இயக்கியவர் சி.வி.சசிகுமார். இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் பார்த்திபன் நடிப்பில் “உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்“ எனும் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார்.
இதற்குப் பின்பு வேறெந்த திரைப்படங்களையும் இயக்காத சி.வி.சசிகுமார் பலருக்கு கதை, திரைக்கதை உருவாகத்தில் உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொண்டை புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த சி.வி.சசிக்குமார் நேற்று சென்னை, போரூர் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார்.
இந்தத் தகவல் தமிழ் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சி.வி.சசிகுமாரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com