சி.வி.குமார் இயக்கிய 'மாயவன்' பாடல்கள் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Wednesday,April 12 2017]

பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் 'அட்டக்கத்தி', 'பீட்சா', 'சூதுகவ்வும்', 'முண்டாசுப்பட்டி' உள்பட பல வெற்றி படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர். இந்நிலையில் இவர் இயக்கி வந்த முதல் திரைப்படமான 'மாயவன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் ஏப்ரல் 17ஆம் தேதி திருக்குமரன் எண்டடெயின்மெண்ட் நிறுவனத்தின் அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் நிச்சயம் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தீப் கிஷான், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷேராப், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு 'சூதுகவ்வும்' புகழ் நலன்குமாரசாமி திரைக்கதை எழுதியுள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் லியோ ஜான்பால் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.