இயக்குனர் சி.வி.குமாரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பா ரஞ்சித் இயக்கிய முதல் படமான ’அட்டகத்தி’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய முதல் படமான ’பீட்சா’ மற்றும் சூது கவ்வும், முண்டாசுப்பட்டி, உள்பட பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவர் ’மாயவன்’ மற்றும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிவி குமார் தயாரிப்பில் ஏற்கனவே ஜிவி பிரகாஷ் நடித்த '4ஜி’ மற்றும் கலையரசன் நடித்து வரும் ’டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும்’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் சி.வி.குமார் தயாரிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
சிவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு ’பிஈ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அம்மு அபிராமி முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கும் இந்த படத்தை குறும்படங்களை இயக்கி புகழ் பெற்ற விக்கி பாஸ்கர் என்பவர் இயக்கவுள்ளார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
Here's our next #ProductionNo20@ThirukumaranEnt In Association with #EthicalSoulFilms
— C V Kumar (@icvkumar) February 14, 2020
.
Titled As #BE
.#BETitleLook
#VikieBaskarRaj @ammu_abhirami #SmritiVenkat @Ghibranofficial #AshwathRajanDayal #KrishnaSudarsan #KSathish @onlynikil @digitallynow pic.twitter.com/Yq7X5kfko4
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments