தமிழில் இன்னொரு இரண்டாம் பாகம் திரைப்படம்.. 3 மொழிகளில் உருவாகும் சயின்ஸ் பிக்சன் கதை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சி.வி குமார் ஏற்கனவே ஒரு சில சயின்ஸ் பிக்சன் படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது மீண்டும் சயின்ஸ் கதையுடன் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படமான ‘அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சி.வி குமார். இதனை அடுத்து ’பீட்சா’ ’சூது கவ்வும்’ ’தெகிடி’ ‘முண்டாசுப்பட்டி’ உள்பட ஒரு சில ஹிட் படங்களை தயாரித்தார். மேலும் ’மாயவன்’ ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ ’கொற்றவை’ போன்ற படங்களை அவர் இயக்கி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான சயின்ஸ் பிக்சன் திரைப்படமான ’மாயவன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தற்போது அவர் திட்டமிட்டுள்ளார். முதல் பாகத்தில் சந்தீப் கிஷான், லாவண்யா திரிபாதி உள்ளிட்டோர் நடித்த நிலையில் அதே டீம் உடன் அவர் இரண்டாம் பாகத்திற்கும் களமிறங்கி உள்ளதாக தெரிகிறது.
இந்த படத்தின் பூஜை நேற்று ஹைதராபாத் நடைபெற்ற நிலையில் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
An auspicious start for an exciting journey💥
— AK Entertainments (@AKentsOfficial) September 25, 2023
Our Production No-26 Pooja ceremony commenced today with the presence of esteemed guests 🪔✨
Starring @sundeepkishan
Directed by @icvkumar @AnilSunkara1 @Music_Santhosh @dopkthillai @kishore_Atv @AKentsOfficial pic.twitter.com/6AqFiky0Jx
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments