காதலில் விழ வேண்டாம்… நடிகை சினேகாவின் வெளியிட்ட க்யூட் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் நடிகை சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் காதலர் தினத்திற்காக தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதில் நடிகை சினேகா பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
நடிகை சினேகா மற்றும் பிரச்சன்னா இருவரும் கடந்த 2009 இல் “அச்சமுண்டு அச்சமுண்டு“ திரைப்படத்தில் நடித்தபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் 2012 மே 11 ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தங்களுடைய காதலைப் பற்றி கூறிய நடிகர் பிரசன்னா ஒரு தெலுங்கு திரைப்படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். எங்களுடைய காதலுக்கு இதுவும் ஒரு காரணம் என்று விழா மேடையொன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதேபோல நடிகை சினகாவும் தங்களுக்குள் இருக்கும் நட்புறவு குறித்துப் பேசும்போது திருமணத்திறகு பிறகு நான் நடிப்பில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் பிரச்சன்னா நீ ஒரு சிறந்த நடிகை, வீட்டில் இருப்பது கிள்டியாக இருக்கிறது என்றுகூறி மோடிவ் செய்துகொண்டே இருப்பார். மேலும் எங்களுக்குள் எந்த ஈகோவும் இல்லை என்று முன்பொரு முறை தெரிவித்து இருந்தார்.
இப்படி ஒருவருக்கொருவர் மீளாத அன்பைக் கொண்டிருக்கும் நடிகை சினோகவும் நடிகர் பிரசன்னாவும் தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு Love என எழுதப்பட்ட டீசர்டை அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்தப் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com