அன்பா பேசினாத்தான் சம்பாதித்து போடுவேன்: அம்மாவிடம் கொஞ்சும் குழந்தையின் வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூக வலைதளங்களில் அவ்வப்போது குழந்தைகளின் கொஞ்சல் மற்றும் சிணுங்கல் வீடியோக்கள் வெளிவந்து வைரல் ஆகி வருவது தெரிந்தது. அந்த வகையில் அடிக்கு பயந்து அம்மாவிடம் கொஞ்சும் குழந்தை ஒன்றின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோவில் அந்த குழந்தையின் அம்மா அவரை மிரட்ட, அவரை சமாதானம் செய்யும் வகையில் குழந்தை அவரை கொஞ்சி பேச முயற்சி செய்கிறது. ஆனால் குழந்தையின் கொஞ்சலில் மயங்காத அம்மா, தொடர்ந்து மிரட்ட அந்த குழந்தையும் பதிலுக்கு பதில் அம்மாவுடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன.
மேலும் ‘நீ அன்பாக பேசினால் தான் நான் பெரியவனாகி உனக்கு சம்பாதித்துக் கொடுப்பேன் என்றும் கோபமாக பேசினால் உனக்கு நான் சம்பாதிக்கும் பணத்தை உனக்கு தர மாட்டேன் என்றும் குழந்தை தனது மழலை மொழியில் கூறுவது அனைவரையும் ரசிக்கும் வகையில் உள்ளது. மேலும் அந்த குழந்தையிடம், ‘நீ ஒன்றும் எனக்கு சம்பாதித்து போட வேண்டாம் என்றும் நானே எனக்கு தேவையானதை வாங்கிக் கொள்வேன் என்று அம்மா கூறியவுடன் குழந்தை மீண்டும் அம்மாவை சமாதானப்படுத்தும் வகையில் கொஞ்ச ஆரம்பிக்கும் காட்சிகளும் ரசிக்கும் வகையில் உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments