தில்லையில் தினேஷ் கார்த்திக் கட்-அவுட்! ரசிகர் மன்றம் எப்போது?

  • IndiaGlitz, [Monday,March 19 2018]

இதுவரை தமிழக இளைஞர்கள் கோலிவுட்டின் பெரிய ஸ்டார்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மட்டும்தான் கட்-அவுட் வைத்து நாம் பார்த்துள்ளோம். ஆனால் முதல்முறையாக ஒரு கிரிக்கெட் வீரருக்கு கட்-அவுட் வைக்கப்பட்டுள்ள அதிசய நிகழ்ச்சி நடந்துள்ளது.

நேற்று வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டியில் திடீரென ஹீரோவாக மாறிய தினேஷ் கார்த்திக், சமூக வலைத்தளங்களின் டிரெண்டாக கடந்த பல மணி நேரமாக இருந்து வருகிறார். புலியின் வாய்க்குள் சென்ற இந்திய அணியை மீட்டெடுத்து கொண்டு வந்த தமிழக வீரர் தினேஷூக்கு  பாராட்டு மழை எட்டு திக்கிலும் இருந்து குவிந்து வருகிறது

இந்த நிலையில் தில்லைவளாகம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தினேஷ் கார்த்திக்கின் கட்-அவுட்டை வைத்து அசத்தியுள்ளனர். இன்னும் அவருக்கு ரசிகர் மன்றம் அமைக்க வேண்டியதுதான் பாக்கி. அதையும் விரைவில் வைத்துவிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.