இதுவல்லவா போனஸ்… தவறுதலாக 1,300 கோடியை வாரி இறைத்த வங்கி!

  • IndiaGlitz, [Monday,January 03 2022]

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல வங்கி ஒன்று கிறிஸ்துமஸ் தினத்தில் தனது 75 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு 130 மில்லியன் பணத்தை தவறுதலாக அனுப்பிவிட்டது. இதனால் மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்த வாடிக்கையாளர்கள் பலரும் தங்களுக்கு கிறிஸ்துமஸ் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு இருப்பதாக நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

சான்டாண்டர் எனும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வங்கி ஒன்று தனது வங்கியில் சம்பளக் கணக்கு வைத்திருக்கும் 75 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு சம்பளத்தை அனுப்பியிருக்கிறது. இதைத் தொடர்ந்து மீண்டும் இரண்டாவது முறையும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி கணக்கில் இருந்து தவறுதலாக பணம் அனுப்பப்பட்டு இருக்கிறது.

இதனால் முதலில் அதிர்ச்சி வெளியிட்ட பலரும் தங்களுக்கு கிறிஸ்துமஸ் போனஸ் வழங்கப்பட்டு இருப்பதாக நினைத்து மகிழ்ச்சிக் கடலில் துள்ளிக்குதித்து இருக்கின்றனர். ஆனால் இதுகுறித்து பேசிய வங்கி நிர்வாகம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 75 ஆயிரம் வாடிக்கையாளர் கணக்குகளுக்கு 130 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 1,310 கோடி அனுப்பப்பட்டு விட்டது. இந்தப் பணத்தை நாங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்பப் பெற்றுக்கொள்வோம் எனத் தெரிவித்து உள்ளனர்.

ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி இந்தச் சம்பவம் நடைபெற்றதால் வாடிக்கையாளர்கள் பலரும் தங்களது பணத்தை செலவழித்துவிட்டதாகத் தெரிவித்து உள்ளனர். இன்னும் சிலர் இது கிறிஸ்துமஸ் போனஸ் தொகை கிடையாதா? என அப்பாவித் தனமாக? கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.