தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ....!ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி...!
- IndiaGlitz, [Monday,April 05 2021]
தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு குறித்த முக்கிய தகவலை, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடப்பாண்டின் துவக்கத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறையத்துவங்கியது. கொரோனா தடுப்பூசியும் வந்துவிட்டதால், இந்த வைரஸிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. தினசரி பாதிப்பு என்பது 3500-க்கும் அதிகமாகிவிட்டது. உயிரிழப்புகளும் உயரந்துவரும் நிலையில், தமிழகத்தில் பொதுமுடக்கம் வருமா என்ற கேள்வி மக்கள் மனதை குழப்பி வருகிறது.
ஏப்ரல்-6-இல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அதன்பின் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது,
மக்கள் வாக்களிக்கும் போது பின்பற்றவேண்டிய வழிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் அவர் கூறினார். தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் இருந்ததே கொரோனா தொற்று அதிகரிக்க காரணமாகும். சரியான வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். இதை செய்தாலே போதும், தொற்று பரவுவதை கட்டுப்படுத்தலாம். தமிழகத்தில் 32 லட்சம் பேர் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர், இவர்களுக்கு அவ்வளவாக பாதிப்பு இல்லை. ஆனால் தற்சமயம் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவருவது வருத்தமளிக்கின்றது.
பொதுமுடக்கம் குறித்து வெளியாகும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம், ஏப்ரல் 7-ஆம் தேதிக்கு பின்தான் படிப்படியாக கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும். மக்கள் பொதுவாக சுப,துக்க நிகழ்வுகளுக்கு அதிகமாக கூடுவதை தவிர்த்து விடுங்கள். மேலும் அத்தியாவசியமில்ல விஷயங்களுக்கு கட்டுப்பாடுகள் போடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.