தமிழகத்தில் ஊரடங்கா...! விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்னென்ன...?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த முக்கிய செய்திகள் வெளியாகி உள்ளது.
கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், பொதுமுடக்கம் வருமா என்று மக்கள் மத்தியில் சந்தேகம் கிளம்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள கொரோனா பாதிப்புகள் குறித்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சுகாதாரத்துறையுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
மேலும் இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 12 மாநிலங்களின் முதல்வர்களுடன், பாரத பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் உரையாடல் நடத்தவுள்ளார். கொரோனாவின் தாக்கம், பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இதில் பேசவுள்ளனர். இதில் தமிழகம் சார்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்க உள்ளார்.
சுகாதாரத்துறை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள்:
வரும் சனிக்கிழமை முதல் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள்
• தமிழகத்தில் கட்டாயமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது.
• ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது போலத்தான், படிப்படியாக கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படும்.
• இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு என்பது முதல் கட்டமாக அமல்படுத்தப்படும்.
• கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கண்காணிப்புகள் என்பது தீவிரமாக்கப்படும்.
• மால்கள், பார்க்குகள், கடற்கரை உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தடை விதிக்கப்படும்.
• திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
• முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
• கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருக்கும் மாநிலங்களிலிருந்து, தமிழகம் வருபவர்கள் கட்டாயமாக இ-பாஸ் எடுத்துவருவது அவசியமாகும்.
• திருமணநிகழ்வுகளில் 100 பேரும், துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி.
• வணிக வளாகங்களான பெரிய கடைகள் மற்றும் ஷோரூம்களில் 50% மட்டுமே அனுமதி.
• மாவட்டங்களுக்குள் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயமில்லை, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாகும்.
• ஆட்டோவில் செல்ல, ஓட்டுனரை தவிர இருவர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி. வாடகை வாகனங்களில் ஓட்டுனரைத்தவிர மூவர் மட்டுமே பயணிக்கலாம்.
• சின்னத்திரை மற்றும் திரைப்படங்களின் படப்பிடிப்புகளுக்கு செல்பவர்கள், கொரோனா பரிசோதனை செய்து, தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாகும்.
• வழிபாட்டுத்தலங்களில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் அனுமதிக்க தடை. இரவு 8 மணி வரை மட்டுமே வழிபாட்டுத்தலங்களில் அனுமதி.
• நீச்சல் குளங்களில் விளையாட்டு பயிற்சி எடுப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி.
• பார்வையாளர்கள் இல்லாமல் மைதானங்களில் விளையாட்டுகள் நடைபெற அனுமதி.
• கேளிக்கை விடுதிகளிலும் 50% மட்டுமே வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
• உணவுக்கடைகள் மற்றும் தேநீர்க்கடைகளில் 50% வாடிக்கையாளர்களுடன், இரவு 11 மணி வரை அமர்ந்து உணவு உண்ண அனுமதி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments