தமிழகத்தில் ஊரடங்கு....!புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன..?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
கொரோனாவின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் சுமார் 21,238 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 144 நபர்கள் இந்த வைரஸால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மே-6 முதல் முதல் 20-ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
1. பால், மருந்து கடைகள் அனைத்து நாட்களும் இயங்கும்.
2.திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மூடப்படும்.
3.தனியார் அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் 50% பணியாளர்களுடன் மட்டுமே இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
4.மெட்ரோ ரயில், பயணியர் ரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்களுக்கு, 50% இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து செல்ல அனுமதி.
5.வணிக வளாகங்கள் மற்றும் பெரிய கடைகள் இயங்க தடை. பலசரக்கு கடைகள் , பெரிய வளாகங்களில் உள்ள காய்கறி கடைகள் இயங்க அனுமதியில்லை.
6. தனியாக இயங்கக்கூடிய பலசரக்கு கடை, மளிகை கடை, காய்கறிக்கடை போன்றவை திங்கள் முதல் சனி வரை செயல்பட மதியம் 12 மணிவரை மட்டும் அனுமதி.
7.ஹோட்டல்கள் திங்கள் முதல் ஞாயிறு செயல்படும்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை,
மதியம் 12 மணி முதல் 3 மணி வரை,
மாலை 6 மணி முதல் 9 மணி வரை, மட்டுமே பார்சலுக்குஅனுமதி வழங்கப்பட்டுள்ளது.
8.தேநீர் கடைகளில் திங்கள் முதல் சனி வரை இயங்கலாம், ஆனால் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை, பார்சலுக்கு மட்டுமே அனுமதி.
9.கடைகளில் குளிர்சாதனவசதியை பயன்படுத்த தடை, அதுமட்டுமில்லாமல் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே கடைகளில் அனுமதிக்கப்படுவார்கள்
10. மீன், மட்டன் உள்ளிட்ட அனைத்து இறைச்சிக் கடைகளும் திங்கள் முதல் வெள்ளி வரை செயல்படும் . ஆனால் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்படும்.
11.திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். துக்க நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
12.சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், தாம் இருக்கும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments