கடலூரில் அதிமுக நடத்திய 'வட்ட போராட்டம்'....! கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.. வைரலாகும் மீம்ஸ்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூக இடைவெளியை தவறாக புரிந்துகொண்ட அதிமுக-வினர் நடத்திய வட்ட போராட்டம், நகைச்சுவை உணர்வை உண்டாக்கியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆட்சிக்கு வந்தால் "நீட் தேர்வை" ரத்து செய்வோம் என்று திமுக வெளியிட்ட வாக்குறுதி பட்டியலில் கூறப்பட்டிருந்தது. ஆனால் தேர்தலுக்காக அறிவித்துவிட்டு, தற்போது அதை நிறைவேற்றவில்லை, இதே போன்று திமுக பல அறிவிப்புகளை கூறி அதை செயல்படுத்தவில்லை என அதிமுக குற்றம் சாட்டி வந்தது.
இந்த நிலையில் திமுக-வை எதிர்த்து அதிமுகவினர், அவரவர் வீட்டிற்கு வெளியிலேயே பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நடைபெற்றது. கூட்டங்களை சேர்த்தாமல், தொண்டர்கள் அவரவர்கள் வீட்டின் வாசலிலே முழக்கமிடும் படி கூறப்பட்டிருந்தது. இந்த காரணங்களால் இன்று காலை 10 மணிக்கு, அதிமுகவினர் தமிழகம் முழுவதும் அவரவர் வீட்டில் இருந்து போராட்டத்தை நடத்தினர். அந்தவகையில் சேலத்தில், எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில்,அவரது இல்லத்திற்கு எதிரில் போராட்டம் நடந்தது. இதேபோல் போடியிலும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல் கடலூர் மாவட்டத்தில், மாட்டுக்குப்பம் பகுதியில் அ.தி.மு.க அலுவலகம் முன்பு அதிமுகவினர் போராட்டம் நடத்த, வெண்மை நிறத்தில் வட்டம் போடப்பட்டிருந்தது. ஆனால் இதைக் கவனிக்காமல் போராடியவர்கள், வட்டமாகவும், நெருக்கமாகவும் ஒன்று கூடி போராட்டத்தை நடத்தியுள்ளனர். இதுகுறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் மீம்ஸ்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் அதிமுக-வினரை வச்சு செய்து கலாய்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments