கடலூரில் அதிமுக நடத்திய 'வட்ட போராட்டம்'....! கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.. வைரலாகும் மீம்ஸ்....!

  • IndiaGlitz, [Wednesday,July 28 2021]

சமூக இடைவெளியை தவறாக புரிந்துகொண்ட அதிமுக-வினர் நடத்திய வட்ட போராட்டம், நகைச்சுவை உணர்வை உண்டாக்கியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று திமுக வெளியிட்ட வாக்குறுதி பட்டியலில் கூறப்பட்டிருந்தது. ஆனால் தேர்தலுக்காக அறிவித்துவிட்டு, தற்போது அதை நிறைவேற்றவில்லை, இதே போன்று திமுக பல அறிவிப்புகளை கூறி அதை செயல்படுத்தவில்லை என அதிமுக குற்றம் சாட்டி வந்தது.

இந்த நிலையில் திமுக-வை எதிர்த்து அதிமுகவினர், அவரவர் வீட்டிற்கு வெளியிலேயே பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நடைபெற்றது. கூட்டங்களை சேர்த்தாமல், தொண்டர்கள் அவரவர்கள் வீட்டின் வாசலிலே முழக்கமிடும் படி கூறப்பட்டிருந்தது. இந்த காரணங்களால் இன்று காலை 10 மணிக்கு, அதிமுகவினர் தமிழகம் முழுவதும் அவரவர் வீட்டில் இருந்து போராட்டத்தை நடத்தினர். அந்தவகையில் சேலத்தில், எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில்,அவரது இல்லத்திற்கு எதிரில் போராட்டம் நடந்தது. இதேபோல் போடியிலும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல் கடலூர் மாவட்டத்தில், மாட்டுக்குப்பம் பகுதியில் அ.தி.மு.க அலுவலகம் முன்பு அதிமுகவினர் போராட்டம் நடத்த, வெண்மை நிறத்தில் வட்டம் போடப்பட்டிருந்தது. ஆனால் இதைக் கவனிக்காமல் போராடியவர்கள், வட்டமாகவும், நெருக்கமாகவும் ஒன்று கூடி போராட்டத்தை நடத்தியுள்ளனர். இதுகுறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் மீம்ஸ்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் அதிமுக-வினரை வச்சு செய்து கலாய்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

சாட்டை துரைமுருகனை பழி வாங்கும் நோக்கில் அரசு செயல்படுகிறது.....! சீமான் காட்டம்....!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு, தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் தம்பி ‘சாட்டை’ துரைமுருகனை வெளிவராதவாறு சிறைப்படுத்துகிறது

பதக்கம் வென்றால் இந்தியர், இல்லையென்றால் சிங்கியா? நடிகர் மனைவியின் சர்ச்சை கருத்து!

பதக்கம் வென்றால் மட்டும் எங்களை இந்தியர் என்று அழைப்பார்கள், மற்ற நேரங்களில் சிங்கி உள்பட பல பெயர்களில் எங்களை இழிவாக அழைக்கின்றார்கள் என பிரபல நடிகர் ஒருவரின் மனைவி

மத்திய அரசு எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி: கமல்ஹாசன் பேட்டி

என்னுடைய பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தும் மத்திய அரசு எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி என கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார்

வீடு தேடிவரும் மருந்து, மாத்திரைகள்… புது திட்டத்தை அமல்படுத்தும் தமிழக முதல்வர்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “மக்களைத் தேடிவரும் மருத்துவம்” எனும் பெயரில் புது திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

நாகேஷ் நடுவராக 'சார்பாட்டா பரம்பரை' சண்டை: வைரலாகும் பழைய வீடியோ!

சமீபத்தில் வெளியான இயக்குனர் பா ரஞ்சித்தின் 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது என்பதும் இந்த படத்தில் 'சார்பாட்டா பரம்பரை மற்றும் இடியாப்பம் பரம்பரை இடையே உள்ள