முன்னாள் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்

  • IndiaGlitz, [Saturday,November 26 2016]

கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், கம்யூனிஸ்ட் புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார். அவருக்கு வயது 90
கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை கியூபாவை ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் தலைவரான பிடல் காஸ்ட்ரோ, வயோதிகம் காரணமாக தனது சகோதரரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு ஓய்வு எடுத்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 90வது பிறந்த நாளை கொண்டாடிய அவர் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார். அவரது மறைவை அவரது சகோதரரும், கியூபா அதிபருமான ராவுல் காஸ்ட்ரோ நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.
பிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கை குறிப்புகள்:
1926: கியூபாவின் தென்கிழக்கு ஓரியண்டே மாகாணத்தில் பிறந்தார்
1953: பாட்டீஷா அரசை எதிர்த்து நடந்த கொரில்லா போரில் கலந்து கொண்டதால் சிறை சென்றார்
1955: சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
1959: மீண்டும் சேகுவாராவுடன் இணைந்து அரசுக்கு எதிரான கொரில்லா போரில் கலந்து கொண்டார். இந்த போரில் கிடைத்த வெற்றியால் பிரதமர் ஆனார்.
1976: கியூபாவின் அதிபராக தேர்வு பெற்றார்.
1992: அமெரிக்காவுடன் அகதிகள் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்
2008: முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பதவி விலகினார்,.

More News

டண்டனக்காவை அடுத்து 'டமாலு டுமீலு'. அனிருத்தின் அடுத்த பாடல்

இளம் இசைப்புயல் அனிருத், இசையமைப்பது மட்டுமின்றி மற்ற இசையமைப்ப&

விஜய் பாடிய 'பைரவா' பாடல். சந்தோஷ் நாராயணன் தரும் முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது இரவுபகலாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

வறுமையில் வாடிய ரஜினி பட இசையமைப்பாளரின் குடும்பத்திற்கு விஷால் உதவி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'மனிதன்', ராஜா சின்ன ரோஜா, போன்ற படங்கள் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் மறைந்த சந்திரபோஸ் அவர்களின் குடும்பம்...

சூர்யா-விக்னேஷ்சிவன் படத்தில் இணைந்த பழம்பெரும் காமெடி நடிகர்

'எஸ் 3' படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நளினி-பிரியங்கா சந்திப்பில் என்ன நடந்தது? சுயசரிதையில் வெளியான அதிர்ச்சி உண்மைகள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினியின்...