முன்னாள் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்

  • IndiaGlitz, [Saturday,November 26 2016]

கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், கம்யூனிஸ்ட் புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார். அவருக்கு வயது 90
கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை கியூபாவை ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் தலைவரான பிடல் காஸ்ட்ரோ, வயோதிகம் காரணமாக தனது சகோதரரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு ஓய்வு எடுத்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 90வது பிறந்த நாளை கொண்டாடிய அவர் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார். அவரது மறைவை அவரது சகோதரரும், கியூபா அதிபருமான ராவுல் காஸ்ட்ரோ நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.
பிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கை குறிப்புகள்:
1926: கியூபாவின் தென்கிழக்கு ஓரியண்டே மாகாணத்தில் பிறந்தார்
1953: பாட்டீஷா அரசை எதிர்த்து நடந்த கொரில்லா போரில் கலந்து கொண்டதால் சிறை சென்றார்
1955: சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
1959: மீண்டும் சேகுவாராவுடன் இணைந்து அரசுக்கு எதிரான கொரில்லா போரில் கலந்து கொண்டார். இந்த போரில் கிடைத்த வெற்றியால் பிரதமர் ஆனார்.
1976: கியூபாவின் அதிபராக தேர்வு பெற்றார்.
1992: அமெரிக்காவுடன் அகதிகள் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்
2008: முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பதவி விலகினார்,.