பள்ளி தோழியுடன் நிச்சயதார்த்தம்… வைரலாகும் சிஎஸ்கே வீரர் துஷார் தேஷ் பாண்டே புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Tuesday,June 13 2023]

ஐபிஎல் 16 ஆவது சீசன் போட்டி முடிந்தவுடனே பல இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களது திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்து வருகின்றனர். அந்த வகையில் சிஎஸ்கே இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நிலையில் மற்றொரு வீரரான துஷார் தேஷ் பாண்டே குறித்த தகவல் தற்போது ரசிகர்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஐபிஎல் 16 ஆவது சீசன் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக களம் இறங்கியவர் துஷார் தேஷ் பாண்டே. இளம் வேகப்பந்து வீச்சாளரான இவர் சிஎஸ்கேவிற்காக இந்த சிசனில் மட்டும் 16 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிரடியாக பந்து வீச்சில் ஈடுபட்டுவரும் இவரை சில நேரங்களில் ரசிகர்கள் விமர்சித்து வந்தாலும் ஐபிஎல் கோப்பையை வெல்லுவதற்கு இவரும் முக்கிய காரணமாக இருந்தார்.

இந்நிலையில் துஷார் தேஷ் பாண்டே தனது பள்ளி தோழியான நாபா கடம்வார் என்பவரை திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள துஷார், எனது பள்ளி பருவ கிரஷ் மணப்பெண்ணாக உயர்வு பெற்றிருக்கிறார் என்று பதிவிட்டு இருப்பது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே ஐபிஎல் போட்டி முடிந்தவுடன் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரரான ருதுராஜ் கெய்க்வாட் மற்றொரு கிரிக்கெட் வீராங்கனையான உத்கர்ஷா பவாரை திருமணம் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். மேலும் மகாராஷ்டிராவை சேர்ந்த இவர்கள் தமிழ் நாட்டு முறைப்படி வேட்டி சேலை அணிந்து தங்களது திருமணத்தை உறுதி செய்தனர்.

இதுகுறித்து கருத்துப்பதிவிட்ட ருதுராஜ் எங்களுக்கு வாழ்க்கைத் தந்த தமிழ்நாட்டை நினைவுகூரும் விதமாக தென்னிந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் செய்துகொண்டோம் எனத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் மற்றொரு வீரரான துஷார் தேஷ்பாண்டே தனது பள்ளிப்பருவ தோழியான நாபா கடம்வாரை நிச்சயதார்த்தம் செய்திருக்கும் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

More News

தமன்னாவின் வேற லெவல் கிளாமர் போட்டோஷூட்.. குவியும் லைக்ஸ், கமெண்ட்ஸ்..!

 திரை உலகில் மார்க்கெட் போன நடிகைகள் மீண்டும் வாய்ப்புகள் பெற இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருவார்கள். ஆனால் தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக

மகாநதி சங்கரின் மகள்களா இவர்கள்? க்யூட் புகைப்படங்கள்..!

நடிகர் மகாநதி சங்கரின் மனைவி, மகள்கள் மற்றும் மகனின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகும் நிலையில் அவருக்கு இவ்வளவு பெரிய மகள்களா? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து

ஆக்ஷன் படத்திற்காக வேறலெவல் வொர்க் அவுட்டில் நடிகை கங்கனா ரணாவத்… வைரல் வீடியோ!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை கங்கனா ரனாவத் இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் வொர்க் அவுட்டில் களம் இறங்கியிருக்கும் வீடியோ சமூகவலைத் தளத்தில் வைரலாகி வருகிறது

13 வயதிலேயே பாலியல் கொடுமையை அனுபவித்தேன்… பகீர் தகவலை பகிர்ந்த பாலிவுட் நடிகை!

பாலிவுட்டில் ஸ்டார் கிட்ஸ் நடிகைகளுள் ஒருவரான சோனம் கபூர், தான் 13 வயதிலேயே பாலியல் கொடுமையை அனுபவித்ததாக பகிர்ந்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

ZEE5 ஓடிடியில் விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்': தேதி அறிவிப்பு..!

இந்தியாவின் மிகப்பெரிய OTT தளம் ZEE5 தளத்தில் விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்' திரைப்படத்தின் உலகளாவிய டிஜிட்டல் பிரீமியர் ஜூன் 16, 2023 அன்று வெளியாகும்  என அறிவித்துள்ளது. SNS புரொடக்ஷன் நிறுவனத்தின்