இனிமேல் இவர் சென்னை மாப்பிள்ளை: பிரபல கிரிக்கெட் வீரருக்கு வாழ்த்து கூறிய சிஎஸ்கே!

பிரபல கிரிக்கெட் வீரர் தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் என சென்னை சூப்பர் கிங்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடி வருபவருமான கிளன் மேக்ஸ்வெல் சென்னையைச் சேர்ந்த வினி ராமன் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்

சென்னை மேற்கு மாம்பலத்தை பூர்வீகமாகக் கொண்ட வினி ராமன் ஆஸ்திரேலியாவில் பார்மசி படித்தவர் என்பதும் மேக்ஸ்வெல்லை இவர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மேக்ஸ்வெல் -வினி ராமன் திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகிய நிலையில் இந்த ஜோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேக்ஸ்வெல் தற்போது சென்னை மாப்பிள்ளை என்றும், திருமண வாழ்த்துக்கள் என்றும், உங்களுடைய புதிய திருமண வாழ்க்கைக்கு விசில் போடுவோம் என்றும் சிஎஸ்கேவின் அதிகாரபூர்வ டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

More News

இதெல்லாம் உங்களுக்கு ஜோக்கா? ஆவேசமான இயக்குனர் வெங்கட்பிரபு

இதெல்லாம் உங்களுக்கு ஜோக்காக தெரிகிறதா? என இயக்குனர் வெங்கட்பிரபு ஆவேசமாக தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சூர்யா-பாலா படத்தின் இசையமைப்பாளர்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சூர்யா நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளியான நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என்பதை ஏற்கனவே

பாலா படம் குறித்த மாஸ் தகவலை வெளியிட்ட சூர்யா: கொண்டாடும் ரசிகர்கள்!

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படம் குறித்த மாஸ் தகவலை சூர்யா தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

விருது வாங்கியபோது திடீரென தொகுப்பாளர் கன்னத்தில் அறைந்த வில்ஸ்மித்: வைரல் வீடியோ

ஆஸ்கார் விருதை வாங்க மேடைக்கு சென்ற நடிகர் வில் ஸ்மித் திடீரென தொகுப்பாளர் கன்னத்தில் அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

டென்னிஸ் சகோதரிகளின் வாழ்க்கை வரலாறு படம்: சிறந்த நடிகர் விருதை பெற்ற வில்ஸ்மித்!

அமெரிக்காவின் டென்னிஸ் சகோதரிகளின் வாழ்க்கை வரலாறு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.