இனிமேல் இவர் சென்னை மாப்பிள்ளை: பிரபல கிரிக்கெட் வீரருக்கு வாழ்த்து கூறிய சிஎஸ்கே!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல கிரிக்கெட் வீரர் தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் என சென்னை சூப்பர் கிங்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடி வருபவருமான கிளன் மேக்ஸ்வெல் சென்னையைச் சேர்ந்த வினி ராமன் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்
சென்னை மேற்கு மாம்பலத்தை பூர்வீகமாகக் கொண்ட வினி ராமன் ஆஸ்திரேலியாவில் பார்மசி படித்தவர் என்பதும் மேக்ஸ்வெல்லை இவர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மேக்ஸ்வெல் -வினி ராமன் திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகிய நிலையில் இந்த ஜோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேக்ஸ்வெல் தற்போது சென்னை மாப்பிள்ளை என்றும், திருமண வாழ்த்துக்கள் என்றும், உங்களுடைய புதிய திருமண வாழ்க்கைக்கு விசில் போடுவோம் என்றும் சிஎஸ்கேவின் அதிகாரபூர்வ டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Maxi becomes a Chennai Maaplai! Thirumana Vaazhthukkal! Whistles to more maximums in your new partnership!??#WhistlePodu #Yellove pic.twitter.com/cKfPkkON9S
— Chennai Super Kings (@ChennaiIPL) March 28, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments