2021 ஐபிஎல் கோப்பை சிஎஸ்கே வுக்கா? விளக்கம் அளிக்கும் நிபுணர் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
2021 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கொரோனா பரவலுக்கு இடையிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் சிஎஸ்கேவின் வெற்றி வாய்ப்பை குறித்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்க தொடங்கி விட்டனர். காரணம் கடந்த ஆண்டு சிஎஸ்கே ப்ளே ஆஃப்பிற்கே செல்லாமல் படு ஏமாற்றம் அளித்த நிலையில் இந்த ஆண்டு அந்த ஏமாற்றத்தைக் குறைக்குமா என்பதே தற்போது பெரும் எதிர்ப்பார்ப்பாக இருந்து வருகிறது.
அதோடு கொரோனா ஏற்படுத்தி இருக்கும் நெருக்கடி காரணமாக முக்கிய வீரர்கள் சிலர் போட்டியை விட்டு விலகி வருகின்றனர். அதோடு நடராஜன், அஸ்வின் போன்ற சிறந்த வீரர்கள் அணியில் இடைபெறவில்லை. இந்நிலையில் கலந்து கொண்ட 6 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்று சிஎஸ்கே மற்றும் பெங்களூர் அணிகள் மட்டுமே முன்னிலை வகித்து வருகின்றன. அதுவும் நேற்றைய போட்டியில் ஹைத்ராபாத் சன்ரைஸ்க்கு எதிராக சிஎஸ்கே மாஸ் வெற்றிப் பெற்றுள்ளது.
இதனால் இந்த 2021 ஐபிஎல் சீசனைப் பொறுத்தவரையில் சிஎஸ்கேவிற்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகப் பலரும் கருத்துக் கூறி வருகின்றனர். அந்த வகையில் மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் சுமந்த் சி.ராமன் அவர்களும் சிஎஸ்கேவிற்கான வெற்றி வாய்ப்பு குறித்தும் சிஎஸ்கே சறுக்கிக் கொண்டு இருக்கும் தருணங்களைக் குறித்தும் சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். இந்த நேர்காணல் தற்போது சமூக வலைத்தளங்களில் தனிக்கவனம் பெற்று இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com