புதிய வீடு புதிய சவால்கள்

  • IndiaGlitz, [Friday,April 20 2018]

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடந்த போராட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை சென்னையிலிருந்து மாற்றி, கடந்த இரண்டு வருடங்களாக தோனி ஆடிய பூனேவுக்கு மாற்றம் செய்தாகிவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரப்பூர்வமான க்ளெப்பிலரிந்து ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் தொடர் வண்டியில் சென்னைக்கு ஆதரவாக இங்கிருந்தே விசில் அடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார்கள். மீதமுள்ள 5 போட்டிகளுக்கும் இந்த ஸ்பெஷல் ரயில் ஓடும் என்கிற செய்தி ஆறுதலாக அமைந்தாலும், ஹர்ஷா போக்லே கூறியதைப்போல, சென்னை அணிக்கு சென்னையில் கிடைக்கும் வரவேற்பும் ஆதரவும் கொஞ்சம் எக்ஸ்டரா ஸ்பெஷல் தான்.

நடந்தது நடந்தாகிவிட்டது, இனிமேல் நடக்கப்போவது என்ன என்பதை மட்டும் கணக்கில் கொண்டால் தான் அடுத்தடுத்த நிலைகளுக்கு சென்னை அணியும் அதனின் ரசிகர்களும் செல்ல முடியும். சென்னையைப்போலவே இரண்டு வருடங்கள் கழித்து ரீ என்ட்ரி அடித்திருக்கும் ராஜஸ்தான் அணியைப் பார்ப்போம்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் விலகினாலும் முதல் சீசனில் ராஜஸ்தானிற்கு கோப்பையை கைப்பற்றிக்கொடுத்த ஷேன் வார்ன் பயிற்சியாளராக இருப்பது பெரும் பலம். இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான ரஹானேவை கேப்டன் ஆக்கி, அவரது 'white ball ' கிரிக்கெட் வாழ்க்கையை மறுசீரமைக்கும் வகையில் அட்டகாசமான வாய்ப்பை வழங்கியுள்ளது ராஜஸ்தான் . மேலும் சென்ற ஆண்டு புனே அணிக்காக விளையாடிய உலகின் தலை சிறந்த ஆள் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், மற்றும் அந்தக்கால தோனியை நினைவுபடுத்தும் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர், பிக் பாஷ் தொடரில் வெளுத்து வாங்கிய டார்சி ஷார்ட் என வெளிநாட்டு வீரர்களை பக்காவாக டிக் அடித்த ராஜஸ்தான் அணி சற்றே சொதப்பியிருப்பது அவர்களது பௌலிங்கில் தான். பெரும் பணம் கொடுத்து ஜெயதேவ் உனத்கட்டை வாங்கியிருந்தாலும், அவரைக்கொண்டு எதிரணியினரின் டாப் ஆர்ட்ரையோ அல்லது இறுதி ஓவர்களில் ரன்களையோ கட்டுப்படுத்தும் வகையில் அவர் இது வரை வீசாதது பெரிய ஏமாற்றமே.

அதேப்போல ஆஸ்திரேலியாவின் பென் லாக்லின், மும்பையின் தவால் குல்கர்னி போன்றவர்களும் சொதப்ப எவ்வளவு அடித்தாலும் பத்தாதே என்கிற வகையில் தான் ராஜஸ்தானின் பேட்ஸ்மான்கள் ஆடி வருகிறார்கள். பிளஸ் பாயிண்ட்டுகள் என்னவென்றால், துவக்கத்தில் தைரியமாக பேட்டை விட்டு ரன்களை சேர்க்கும் ரஹானே, சஞ்சு சாம்சனின் விஸ்வரூப வளர்ச்சி, பட்லரின் சிக்ஸ் பறக்க விடும் திறமை, கெளதம் கிருஷ்ணப்பா, ஷ்ரேயாஸ் கோபால் என தெறிக்கவிடும் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள். இது வரை வென்ற இரண்டு போட்டிகளிலும் கிளிக் ஆகியவர்கள் என்று பட்டியலிட்டால் அதில் மேலே குறிப்பிட்டுள்ள 5-6 நபர்களின் பங்கில் அது முடிந்துவிடும். தோனி எவ்வாறு சென்ற வருடம் ஸ்டாக்ஸை கொண்டு இறுதி ஓவர்களை தன் வசமாக்கினாரோ அதே போல ரஹானேவும் செயல்பட்டால் ராஜஸ்தான் மிரட்டல் அணியாக உருவெடுக்கும்.

சென்னை பக்கம் வருவோம். புதிய இடம் ஆனாலும் பெரிதாக வித்தியசாமிருக்கப்போவதில்லை, ஏனெனில், மும்பையில் நடந்த போட்டியிலேயே அதுவும் மும்பைக்கு எதிராக அவர்களின் மைதானத்திலேயே முதல் ஆட்டத்தில் சென்னை ரசிகர்களின் சத்தம் அதிகமாகவே இருந்தது. இப்போது சென்னையிலிருந்து வேறு ஒட்டுமொத்தமாக கிளம்பிச் சென்றிருக்கிறார்கள் என்றால் என்ன நடக்கும் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

துக்கத்தில் அடித்தளம் அமைத்துக்கொடுக்க  வாட்சன்-ராயுடு, ரெய்னா மீண்டும் வந்தால் பட்டாசான முதல் மூன்று வீரர்கள். தோனியின் ஃபார்ம் எதிரணியினருக்கு புதுவிதமான கலக்கத்தை கொடுத்திருக்கும். பில்லிங்ஸ், ப்ராவோ என பேட்டிங்கை பொறுத்தவரை பிரச்சனையில்லை. ஆனால் ராஜஸ்தானின் பந்துவீச்சோடு சென்னை அணியின் பௌலர்களை நிறுத்தினால், யாரையும் குறிப்பிட்டு இவர் ஒருவர் நம்மை கரை சேர்ப்பார் என்று சொல்ல முடியாத நிலையில்தான் இருக்கிறது.  முதல் போட்டியில் ஜொலித்த தீபக் சாஹர் அடுத்த இரண்டு போட்டிகளிலிலும் செம்ம அடி வாங்கிவிட்டார். ஷார்துல் தாகூர் முதல் ஹர்பஜன் சிங் வரை எல்லோருமே இதுவரை சோபிக்காமலிருப்பது சென்னையின் பெரிய பலவீனம். தோனியின் அனுபவத்தைக்கொண்டு சீக்கிரமே இந்த பிரச்சனைகளை முடித்துவிடுவார் என்கிற நம்பிக்கையில் நிர்வாகமும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

இது வரை நடைபெற்ற மூன்று ஆட்டங்களிலும் சேஸ் செய்து இறுதிஓவர் வரை ஆட்டத்தை எடுத்துச்சென்று இரண்டில் வெற்றிப்பெற்றிருந்தாலும், என்றாவது ஒரு போட்டியில் முதலில் ஆடவேண்டியிருக்கும். அது எவ்வளவு சீக்கிரம் நடந்து அதற்கேற்ப சென்னை அணி எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்க விசிலோடு காத்துக்கொண்டிருக்கிறது மஞ்சள் படை.

-  பத்மநாபன் நாகராஜ்

More News

கமலாலய வாசலில் களமாடும் பத்திரிக்கையாளர்கள்

நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், நேற்று தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து

எஸ்.வி.சேகரும், எச்.ராஜாவும் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயகுமார் விளாசல்

சமீபத்தில் தமிழக கவர்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தை தட்டியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

படிக்காமல் பதிவு செய்துவிட்டேன்: பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர்

நகைச்சுவை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசும் விதத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.

ஜோதிகா படத்தில் அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினர்

பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'துமாரி சூளு' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

திரையுலகில் 40 ஆண்டுகள்: விஜயகாந்துகு கமல், ரஜினி, சூர்யா பாராட்டு

தமிழ் திரையுலகில் கேப்டன் விஜயகாந்த் 40 ஆண்டுகள் சேவை செய்துள்ளதை அடுத்து அவருக்கு சமீபத்தில் பிரமாண்டமான விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது.