இளம் வீரர்களுக்கு கைக்கொடுத்த சிஎஸ்கே!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் போட்டியில் சென்னை சிஎஸ்கே அணி தகுதிச் சுற்றுக்கே போகாமல் வெளியேறியது. இந்த அணியில் பல சீனியர் வீரர்கள் இருந்தாலும் அவர்கள் சிறப்பாக செயல்படாததே காரணம் என்றும் விமர்சிக்கப் பட்டது. இந்நிலையில் டோனி தலைமையிலான சிஎஸ்கே அணி அடுத்து வரும் ஐபிஎல் போட்டிகளுக்காக புது வீரர்களை ஏலத்தில் எடுத்து வருகிறது. இதில் எப்போதும் மூத்த வீரர்களை குறி வைக்கும் சிஎஸ்கே முதல் முறையாக 2 இளம் வீரர்களுக்கு கைக்கொடுத்து இருக்கிறது. இதனால் சிஎஸ்கேவின் கணிப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது.
முன்னதாக சிஎஸ்கே அணியில் இருந்து கேதர் ஜாதவ், வாட்சன், பியூஷ், சாவ்லா, முரளி விஜய், மோனு சிங், ஹர்பஜன் சிங் போன்றோர் விலக்கப்பட்டு ஒரு வெளிநாட்டு வீரர் மற்றும் 7 உள்நாட்டு வீரர்களை சிஎஸ்கே ஏலம் எடுக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று மொயின் அலியை ரூ.7 கோடி ரூபாய்க்கும் அடுத்து கிருஷ்ணப்பா கவுதமை ரூ.9.25 கோடிக்கும் மற்றும் சீனியர் வீரர் புஜாராவை அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கு சிஎஸ்கே நேற்று ஏலம் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ஏலத்தில் கலந்து கொண்ட சிஎஸ்கே ஒரு கலவையான வீரர்களின் தேர்வை உருவாக்கி இருக்கிறது. அதில் ஆந்திராவை சேர்ந்த ஹரிசங்கர் ரெட்டி, பகத் வர்மா ஆகிய இருவரும் சிஎஸ்கே சார்பில் தலா 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தி எடுக்கப்பட்டு உள்ளனர். வலது கை பவுலரான ஹரி சங்கர் ரெட்டி சையத் முஷ்டாக் கோப்பை போட்டியின்போது பேட்டிங்கிலும் கலக்கி இருந்தார். மற்றொருவரான பகத் வர்மா வலது கை ஆப் ஸ்பின் பவுலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டணி புது உற்சாகத்தை கொண்டு இருக்கும் என்றே ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout