சீன தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய டுவீட்: சிஎஸ்கே டாக்டர் பதவி நீக்கம்

இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு இருதரப்பு ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சீன தரப்பில் 35 ராணுவ வீரர்கள் பலியாகி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நாடு முழுவதும் சீனாவின் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சீன தாக்குதலுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தியா எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று எதிர்க் கட்சித் தலைவர்களும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சீன தாக்குதலில் உயிரிழந்த 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு பதிவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மருத்துவரான டாக்டர் மது தொட்டபிளில் என்பவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அவர் அந்த டுவிட்டை டெலிட் செய்துவிட்டார்.

இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டாக்டர் மது தொட்டபிளில் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அவருடைய தனிப்பட்ட டுவிட்டை தாங்கள் கவனிக்கவில்லை என்றும் இது குறித்து தங்கள் கவனத்திற்கு வந்த உடன் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மருத்துவர் பணியில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் கொரோனாவால் உயிரிழப்பு

கடந்த சில வாரங்களாகவே சென்னையில் கொரொனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருவதும் தினமும்

கொரோனா சிகிச்சைக்கு குறைந்த விலையில் மருந்து: கேம் சேஞ்சராக இருக்குமா என எதிர்பார்ப்பு!!!

கொரோனா சிகிச்சைக்கு ஒரு புதிய கேம் சேஞ்சராக இருக்கும் என ஸ்டிராய்டு வகை மருந்து ஒன்றை பிரிட்டன் அதிபர் பரிந்துரை செய்திருக்கிறார்.

சீன ராணுவத்தினரின் பலி எண்ணிக்கை எவ்வளவு? அமெரிக்க உளவுத்துறையின் தகவலால் பெரும் பரபரப்பு 

இந்தியா சீன ராணுவ வீரர்கள் இடையே நேற்று முன்தினம் நள்ளிரவு லடாக் பகுதியில் உள்ள கால்வான் என்ற இடத்தில் நடந்த மோதல் உலக நாடுகளையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சீனாவை அடுத்து பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியாவை சுற்றி வளைக்கும் அண்டை நாடுகள்

நேற்று முன்தினம் நள்ளிரவு லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 வீரர்கள் பலியாகி

அணுஆயுதம் அதிகமாக வைத்திருக்கும் நாடு: சீனாவா??? இந்தியாவா???

உலக நாடுகளிடையே அணு ஆயுதச் சோதனைகள் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமையாகப் பார்க்கப்பட்டாலும் ஒவ்வொரு நாடும் தங்களது ஆயுதப் படைகளை வலுப்படுத்திக் கொண்டே வருகின்றன